உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்க செயற்குழு கூட்டம்

சங்க செயற்குழு கூட்டம்

மேலுார் : மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதியர் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது. செயலாளர் ஸ்ரீகண்டன் மாதாந்திர, பொருளாளர் ஆதிசிவன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர். செயல்தலைவர் மணி, கவுரவ தலைவர்கள் வீரணன், துரைப்பாண்டி மற்றும் உறுப்பினர்கள் சங்க வளர்ச்சி குறித்து பேசினர். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். தற்போது பணியில் உள்ள அரசு அலுவலர் சங்கங்கள் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ