உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் கோப்பைக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள் செப்.10ல் ஆரம்பம்

முதல்வர் கோப்பைக்கான தடகள குழு விளையாட்டுப் போட்டிகள் செப்.10ல் ஆரம்பம்

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள் செப்.10 ல் துவங்குகிறது.பள்ளி மாணவர்களுக்கான கூடைபந்து, வளைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ், கோகோ போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செப். 10, 11 ல் நடக்கிறது. பள்ளி மாணவிகளுக்கான இதே போட்டிகள் செப். 12, 13ல் நடக்கிறது. கல்லுாரி மாணவர்களுக்கு செப். 17, 18 லும், மாணவிகளுக்கு 19, 20 ல் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி செப். 12, 13 லும், இறகுபந்து போட்டி செப்.13, 14 லும் கல்லுாரிகளுக்கான டேபிள் டென்னிஸ் செப். 17, 18 லும் இறகுபந்து போட்டி செப். 19, 10 லும் நடக்கிறது.பொதுப்பிரிவினருக்கான ஆண், பெண் கபடி, சிலம்பம், வாலிபால், கேரம், இறகுபந்து போட்டிகள் செப். 14, 15லும் அரசு ஊழியர்களுக்கு கபடி, வாலிபால், கேரம், செஸ், இறகுபந்து போட்டிகள் செப். 24ல் நடக்கிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளிகளுக்கான தடகள போட்டி செப். 13, கல்லுாரிகளுக்கு செப்.20, பொதுப்பிரிவினருக்கு செப். 15, அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 24ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை