உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனவர் மீதான தாக்குதல் இந்திய பொருளாதாரம் மீதான தாக்குதலே; ம.ஜ.க., தலைவர் தமீமுன் அன்சாரி கருத்து

மீனவர் மீதான தாக்குதல் இந்திய பொருளாதாரம் மீதான தாக்குதலே; ம.ஜ.க., தலைவர் தமீமுன் அன்சாரி கருத்து

மதுரை : 'தமிழக மீனவர் மீதான தாக்குதல் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதலே,'' என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தால் ரூ.7 ஆயிரத்து 616 கோடி மதிப்பில் 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் போர்டு கார் நிறுவன தொழிற்சாலை மீண்டும் இயங்க முடிவெடுத்து இருக்கிறது. ஒரு மாநில முதல்வர் வெளிநாடு சென்று வர்த்தகம் உயர்கிறது என்றால் அதனை வரவேற்க வேண்டும்.அவருடைய வெளிநாட்டுப் பயணம் தோல்வி என்பது வேடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது.வங்க கடல் பகுதியில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, இந்திய வருமானம், மீன் ஏற்றுமதி பாதிக்கிறது. இதனை இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டும்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் தான். தமிழக மீனவர்களை கைது செய்து, அபராதம் விதித்து, பின்பு மொட்டை அடித்து அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை கண்டிக்கும் விதமாக இலங்கை துாதரை அழைத்து மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை