தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் பொதுமருத்துவத் துறை சார்பில் தொடர் கல்வி கருத்தரங்கு மற்றும் டீன் தர்மராஜ்க்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.டாக்டர் டேவிட் பிரதீப் குமார் வரவேற்றார். துறைத்தலைவர் நடராஜன் குத்துவிளக்கேற்றினார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் பாலாஜிநாதன் தலைமை வகித்தார். மதுரை அரசு மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ. சரவணன், அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். டீன் தர்மராஜ் கவுரவிக்கப்பட்டார். கருத்தரங்க அமர்வுகளில் டாக்டர்கள் விவேகானந்தன், ஜீவராஜ், திருமலைகொழுந்து சுப்ரமணியன் பேசினர்.