மேலும் செய்திகள்
அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானம்
11-Sep-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.அரசு அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். உசிலம்பட்டி சந்தை திடல் நுாலகம் முன்பு மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை தேவை. 58 கிராம கால்வாயில் கடைமடை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக கருமாத்துாரில் இருந்து உசிலம்பட்டி வரை வெட்டிய 800 மரங்களுக்கு பதிலாக 5000 மரக்கன்றுகள் நடப்படும் என ஆர்.டி.ஒ., முன்னிலையில் கடந்த ஜூன் 2023 ல் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் மரக்கன்றுகளை நட முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
11-Sep-2024