முதலுதவி பயிற்சி
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அரசுத்துறை வாகன ஓட்டுனர்களுக்கான பயிற்சி பள்ளியில் விபத்து காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவி குறித்த பயிற்சி நடந்தது. விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்தும், சாலை விபத்துகளால் உயிரிழப்பு தொடர்வது, சாலை விதிகளை பின்பற்றுதல், விபத்துகளில் காயமடைவோர் ரத்தஇழப்புக்கு ஆளாவது, மாரடைப்பு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சி.பி.ஆர்., பயிற்சி குறித்தும், எலும்பு முறிவு, ரத்தக்கட்டு ஏற்படும்போது பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார். பொறியாளர் முத்துக்குமார் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.