பழுதுநீக்க இலவச பயிற்சி
மதுரை : மத்திய, மாநில நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் 'டிவி', அலைபேசி, லேப்டாப், சாப்ட்வேர், ஹார்டுவேர் இலவச பழுதுநீக்க பயிற்சியுடன் ஆங்கில பேச்சுப்பயிற்சியும் அளிக்கப்படும்.குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பயிற்சி காலத்தில் சீருடையும் இலவச பயிற்சிக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படும். 4 மாதங்களுக்கு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி நடைபெறும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை பெற்றுதரப்படும். தொடர்புக்கு: 93446 13237.