மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
05-Sep-2024
மதுரை, : மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.மதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமை வகித்தார். ஆன்மிக அணி மாநில செயலாளர் குணா வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் குபேரராஜ்குமார், செயலாளர் கோவில்செல்வம் முன்னிலை வகித்தனர்.நட்சத்திரம் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார்குரு, இலங்கை மட்டக்களப்பு சீனிதம்பியோகேஸ்வரன் கொடி அசைத்து விநாயகர் ஊர்வலத்தை துவக்கினர். மகாஸ்ரீயுக்தேஸ்வர சுவாமிகள், பாம்பன்பாலன் சுவாமிகள் ஆசிவழங்கினர். பா.ஜ., மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாறன், வழக்கறிஞர் முத்துக்குமார் பங்கேற்றனர். ஏராளமானோர் விநாயகர் சிலைகளை வைகை ஆற்றில் கரைத்தனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமங்கலம்
திருமங்கலம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் 12 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று திருமங்கலம் ஓமியோபதி கல்லுாரி விளையாட்டு மைதான பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு செங்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன. ராஜாஜி சிலை அருகே ஹிந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் பாரதிய மஸ்துார் சங்க மாநில தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். நகர் தலைவர் பாலமுருகன், பா.ஜ., நகர் தலைவர் விஜயேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஓம்ஸ்ரீமுருகன் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., அருள் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் விஜய காண்டீபன், லட்சுமி லதா, சரவணன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலுார்
மேலுாரில் மாநில துணைத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். செயலாளர் (விவசாய அணி) ரமேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் ஊர்வலத்தை முருகன் துவக்கி வைத்தார். முன்னதாக மாநில தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். விநாயகர் சிலைகள் மண்கட்டி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. எழுமலை
எழுமலை வட்டார கிராமங்களில் 16 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு இந்தச் சிலைகள் எழுமலை ராஜகணபதி கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடத்தினர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைத்தனர். உசிலம்பட்டி டி.எஸ்பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
05-Sep-2024