உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயில்களில் கோகுலாஷ்டமி பூஜை

குன்றத்து கோயில்களில் கோகுலாஷ்டமி பூஜை

திருப்பரங்குன்றம் : கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருநகர் சிந்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை நடந்தது. உற்ஸவர் ஸ்ரீநிவாச பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருப்பரங்குன்றம் பெரியரத வீதி கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜை நடந்தது. கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு அபிஷேகங்கள், பூஜை, தீபாராதனை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.விளாச்சேரி சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருகுலத்தில் சுப்ரபாதம், சிறப்பு ஹோமம் முடிந்து வாசுதேவ கிருஷ்ணர் கருட வாகனத்தில் புறப்பாடானார். இரவு 108 கலசாபிஷேகம், கிருஷ்ணாவதாரகால பூஜை, தீபாராதனை நடந்தது.பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவர்கள், உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. குழந்தைகள் கண்ணன், ராதை வேடமணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ