உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எச்.எம்.எஸ்., சங்கக்கூட்டம்

எச்.எம்.எஸ்., சங்கக்கூட்டம்

மதுரை: மதுரையில் அரசுப் போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்கள் கண்ணன், ஒச்சாத்தேவன், ஆலோசகர் சேதுராமன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் ஷாஜகான் தீர்மானங்களை விளக்கினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அரசே ஏற்று வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். 240 நாட்கள் பணியை நிறைவு செய்வு தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யாமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் நலச்சட்டம், ஊதிய ஒப்பந்த ஷரத்துகளை நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். பணியாளர்கள் ஓய்வுபெறும் தினத்தன்று ஓய்வுகால பணப்பலன்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ