உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத நல்லிணக்கச் சான்று திருப்பரங்குன்றம் மலை கருத்தரங்கில் தகவல்

மத நல்லிணக்கச் சான்று திருப்பரங்குன்றம் மலை கருத்தரங்கில் தகவல்

மதுரை: 'திருப்பரங்குன்றம் மலை மத நல்லிணக்கத்திற்கான சான்று' என மதுரையில் நடந்த கருத்தரங்கில் தொல்லியல் ஆய்வறிஞர் சாந்தலிங்கம் பேசினார்.மதுரையில் மத நல்லிணக்க வழக்கறிஞர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் மலையின் வரலாறு, அது சம்பந்தமான தீர்ப்புகள்குறித்து சட்டக் கருத்தரங்கம் நடந்தது.சாந்தலிங்கம் பேசியதாவது:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகநானுாற்றுப் பாடலில் திருப்பரங்குன்றத்தை 'முருகன் குன்றம்' என பாடினர். தமிழகத்தில் கோயில்கள்6ம் நுாற்றாண்டில் தான் உருவாகின. எனவே முருகன் குன்றம் என்பது குறிஞ்சி நில தலைவனை முருகன் எனப் பெயரிட்டு ஆதித்தமிழ் குடிகள் வணங்கியுள்ளனர். அச்சமகாலத்தில் மலையின் மேற்கில் சமணத்துறவிகள் வாழ்ந்ததாகவும், அவர்களுக்கு பலர் படுக்கைகள்செய்து கொடுத்ததாகவும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி., 770ல் மூன்று தேவார பாடல் ஆசிரியர்கள்திருப்பரங்குன்றத்து நாயனார் எனும் பெயரில் சிவன் குன்றம் என பாடியதன் படி தற்போதுள்ள குடைவரை கோயில் உருவாக்கப்பட்டது. 13ம் நுாற்றாண்டில் மதுரையில் நடந்த சுல்தான் ஆட்சியின் கடைசி அரசர் சிக்கந்தர் ஷா உயிர் நீத்த இடத்தில் மலை மீது தர்கா கட்டப்பட்டது. இவ்வாறு மத நல்லிணக்கச் சான்றாக திருப்பரங்குன்றம் மலை உள்ளது என்றார்.வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குன்றத்து விவகாரம்குறித்தும் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ