மேலும் செய்திகள்
சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்
27-May-2026
சோழவந்தான்: சோழவந்தானில் சாக்கடை கால்வாய் சீரமைப்புக்காக தோண்டிய பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்’’ என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். வாடிப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே முறையாக சாக்கடை கால்வாயை இணைக்காததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இதை சீரமைக்க பேரூராட்சி சார்பில் 20 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டி கழிவுகள் அகற்றப்பட்டன. விடுபட்ட இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தை மூடவில்லை. அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். சமூக ஆர்வலர் ராம்குமார் கூறியதாவது: பள்ளம் தோண்டி 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 10 அடி நீளம், 6 அடி அகலம், 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டினர். ஏற்கனவே இருந்த சாக்கடை கால்வாய் சுவரில் கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளன. இதனால் சிறுவர்கள் விழுந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. அருகே 2 மின்கம்பங்கள் எவ்வித பிடிமானமும் இன்றி ஆபத்தாக எப்போது வேண்டுமானாலும் விழலாம் எனும் நிலையில் உள்ளன. குப்பை அடைத்து கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்
27-May-2026