உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ம.தி.மு.க.,வினர் ஆலோசனை

ம.தி.மு.க.,வினர் ஆலோசனை

மதுரை: மதுரையில் ம.தி.மு.க., சார்பில் 16 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. துணைப் பொதுச் செயலாளர் உட்பட காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டது. கூட்டத்தில் வைகோ பேசுகையில், துணைப் பொதுச் செயலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மே 25 முதல் விண்ணப்பம் பெறலாம். போட்டியிடுவோரை 25 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். ஜூன் 27 ல் கட்சி பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதில் முடிவு தெரிவிக்கப்படும் என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., பூமிநாதன், நகர் செயலாளர்கள் முனியசாமி, மாரநாடு, நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெயராம், தொழில்சங்க நிர்வாகி மகபூப்ஜான் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !