வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மதுரை: மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. உதவிப் பேராசிரியர் உமாராணி வரவேற்றார். கலாசார டீன் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் செந்தில்நாதன் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விளக்கினார். இளங்கலை மாணவி அனிதா நன்றி கூறினார்.