உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  -போக்சோ வழக்குதந்தைக்கு வாழ்நாள் சிறை 

 -போக்சோ வழக்குதந்தைக்கு வாழ்நாள் சிறை 

மதுரை: மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி, சிறுமியான தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். கருக்கலைப்பு செய்தார். போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தொழிலாளி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 6லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ