உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், சம்பள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் கருப்பு பட்டடை அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பல்கலையில் நிலவும் நிதிநெருக்கடியால் இரண்டு மாதங்களாக பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால் வருவாயை அதிகரிக்கவும், சம்பள பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதை கண்டித்து பதிவாளர் அறைமுன் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், நேற்று ஆசிரியர் தினத்தில் கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். பேராசிரியர்கள் கணேஷ், ஆனந்த், முருகேசன் ஆகியோர் பேசினர்.பேராசிரியர்கள் கூறியதாவது: சம்பளம் இல்லாததால் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். ஆனாலும் மாணவர்கள் வகுப்பு பாதிக்காத வகையில் மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை தினம் தொடர் மற்றும் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !