உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழைத்தார்கள் கொள்முதல்

வாழைத்தார்கள் கொள்முதல்

மதுரை: மதுரை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் அலங்காநல்லுார் குட்டிமேய்க்கிப்பட்டி கிராம விவசாயி துரைச்சாமியிடம் வாழைத்தார்கள் கொள்முதல் செய்யப்பட்டன.வேளாண் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது:இத்துறை மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அலங்காநல்லுார் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்தாண்டு உருவாக்கப்பட்டது.இந்நிறுவனம் மூலம் விவசாயி துரைச்சாமியிடம் இருந்து 500 வாழைத்தார்கள் ரூ.1.20 லட்சத்திற்கு நேரடி கொள்முதல் செய்யப்பட்டு அருப்புக்கோட்டை தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.மதுரை மாவட்ட வாழை விவசாயிகள் வாழைத் தார்களை விற்க அந்தந்த வட்டார வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை அணுகலாம் என்றார்.வேளாண் அலுவலர்கள் சித்தார்த், மீனா, உதவி அலுவலர் பரமேஸ்வரன், நிறுவன சி.இ.ஓ., ராஜபாண்டி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை