உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர்கள் ஊர்வலம்

ஆசிரியர்கள் ஊர்வலம்

மதுரை, : அரசு நிதி உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்-ஆக்ட்) சார்பில் மதுரையில் ஊர்வலம் நடந்தது. மூட்டா தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தார்.பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) மற்றும் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி பல்கலைகள், கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை 2021 ல் வெளியானது. தற்போதுவரை அதற்குரிய நிலுவைத் தொகை, அடிப்படை ஊதியம் வழங்கவில்லை.உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு நியாயமான, சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ