வேன் நன்கொடை பாதுகாப்பு விழிப்புணர்வு தமிழ்க்கூடல்
மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நோயாளிகளை அழைத்து செல்லவும், மருத்துவ முகாம் நடத்தவும் மதுரை கோட்ட ஆயுள் காப்பீட்டு கழகத்தின் கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன் மூலமாக ரூ.27 லட்சம் மதிப்புள்ள வேன் நன்கொடையாக வழங்கப்பட்டது. எல்.ஐ.சி., தென்மண்டல மேலாளர் வெங்கட்ரமணன் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி, இயக்குனர் டாக்டர் நாச்சியாரிடம் வழங்கினார்.மதுரை: மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திட்ட உதவியாளர் ரம்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தலைமை வகித்தார். உணவு மற்றும் சத்தியல் உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி, பண்ணை மேலாளர் காயத்ரிதேவி கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தொழில்நுட்ப திட்ட உதவியாளர் விஜயலலிதா நன்றி கூறினார்.மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல், நுால் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தின் ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். சினிமா இயக்குனர் பிருந்தா சாரதி இயக்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் வெளியிடப்பட்டது. திருமலையின் 'நமக்கு எதற்கு வம்பு', சுந்தரபாண்டியனின் 'மதன் மனசுல சுதா', பிருந்தாசாரதியின் 'முக்கோண மனிதன்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன. சண்முகஞானசம்பந்தன். அனார்கலி, சோழநாகராஜன் நுால் மதிப்புரை வழங்கினர். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.