மேலும் செய்திகள்
மதுரையை மிரட்டும் மேகங்கள்
09-Oct-2024
மதுரை: வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் மதுரை மாவட்டம் முழுவதும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்ட அளவில் பரவலாக மழை பெய்தது. மழையளவு (மி.மீ.,யில்):மதுரை வடக்கு 1.4, தல்லாகுளம் 2.2, பெரியபட்டி 16.4, விரகனுார் 1.4, சிட்டம்பட்டி 8.4, கள்ளந்திரி 12, தனியாமங்கலம் 2, மேலுார் 3.5, புலிப்பட்டி 55.6, வாடிப்பட்டி 75, சோழவந்தான் 12, சாத்தையாறு அணை 110, உசிலம்பட்டி 25, குப்பணம்பட்டி 25, விமான நிலையம் 3.3, திருமங்கலம் 1.2, பேரையூர் 24.2, எழுமலை 57.4, கள்ளிக்குடி 16.4. அணைகளில் நீர் இருப்பு
பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.6 அடி (மொத்த உயரம் 152). அணையின் நீர் இருப்பு 2556 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 326 கனஅடி தண்ணீர் வருகிறது. வினாடிக்கு 833 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.92.(மொத்த உயரம் 71 அடி). அணையில் நீர்இருப்பு 3040 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 1098 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 869 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 20.9 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர்இருப்பு 29.53 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு36 கனஅடி தண்ணீர் வருகிறது.
09-Oct-2024