ஓராண்டாக உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் 4 ஆயிரம் பேர் காத்திருப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் விண்ணப்பித்து ஓராண்டாகியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய்த்துறை மூலம் மாதந்தோறும் ரூ. 1500 உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. 40 முதல் 75 சதவீதம் வரை பாதிப்புள்ளோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப் படும். அதற்கு மேல் பாதிப்புள்ளோருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவ்வகையில் மாற்றுத் திறனாளிகள் பலர் ஓராண்டுக்கு முன் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக் கின்றனர். மாவட்ட அளவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வகையில் உள்ளனர். இவர் களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனு மதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 600க்கும் மேற்பட்டோருக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் விட்டது. ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ''விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஓராண்டாக அனுமதி கிடைக்காததால் மாற்றுத்திறனாளிகள் பலரும் சிரமப்படுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வசமே இவர்களுக்கான துறை உள்ளது. மாநில அளவில் 40 ஆயிரம் பேர் வரை உள்ளனர். எனவே முதல்வர் தலையிட்டு உதவித் தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்'' என்றார்.