குன்றத்தில் ரூ.44 லட்சம் உண்டியல் வருமானம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், கிரிவல உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.44 லட்சத்து 43 ஆயிரத்து 563, தங்கம் 66 கிராம், வெள்ளி 1130 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் ஈடுபட்டனர்.