மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து ஆடுகள் பலி
22-Oct-2024
எழுமலை : எழுமலை உத்தப்புரம் பொட்டல்பட்டி குபேந்திரன் 50. கிராமத்தில் தோட்டத்தை ஒத்திக்கு வாங்கி விவசாயம் செய்து வருவதோடு 7 ஆடுகளையும் வளர்த்து வந்தார். மூன்று ஆடுகள் சினைபிடித்து இருந்தன. நேற்று எப்போதும் போல் மேய்ச்சலுக்கு விட்டபின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு வேலை உறுதியளிப்புத்திட்ட பணிக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து தோட்டத்திற்கு வந்த போது ஆடுகள் அனைத்தும் கழுத்துப்பகுதியில் காயத்துடன் உயரிழந்து கிடந்தன. எழுமலை போலீசில் புகார் செய்தார். நாய்கள் கடித்ததா அல்லது வனவிலங்கு கடித்ததா என விசாரிக்கின்றனர்.
22-Oct-2024