உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  7 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 7 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: எழுமலை அருகே மல்லப்புரம் கிராமம் வழியாக தேனி மாவட்டத்தை இணைக்கும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக மல்லப்புரம்- மயிலாடும்பாறை ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மல்லபுரம் ஊராட்சி ஏழு கிராம மக்கள், அய்யனார் கோவில் அணை விவசாய பாசன சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது. பாசன விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ராமர், ராஜசேகரன், பாலையா, காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ரோடு போக்குவரத்துக்கு கொண்டுவரப்பட்டால் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு செல்ல 50 கி.மீ., வரை சுற்றி வரவேண்டிய அவசியம் இருக்காது. மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு வருவதற்கும் எளிதாக இருக்கும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை