ரூ.28 கோடிக்கு விளைபொருள் விற்பனை; 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் டன்
திருமங்கலம்: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் நான்கு ஆண்டுகளில் 7 ஆயிரத்து 900 டன் விளை பொருள்கள் ரூ.28 கோடிக்கு விற்றதன் மூலம், 3500 விவசாயிகள், 483 வியாபாரிகள் பய னடைந்துள்ளனர். திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 20க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப். குழுக்கள் துவங்கி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து பயன்பெற்று வருகின்றனர். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை அவற்றை உலர வைக்க உலர் களங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பாதுகாக்க தார்பாய்கள், பயிர்களை காய வைக்க தொழிலாளர்கள் ஏற்பாடு செய்வது, இருப்பு வைக்க சேமிப்பு கிட்டங்கிகளை ஏற்பாடு செய்து தரும் பணிகளையும் செய்கின்ற னர். வியாபாரிகளுக்கு தேவையான பொருளை பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரவழைத்துக் கொடுக் கின்றனர். பாரம்பரிய நெல் வகைகள், சாதாரண நெல் வகைகள், தானிய வகைகள், சிறு தானியங்கள், எண்ணை வித்துகள் உள்பட அனைத்து பொருள்களையும் விற்பனை செய்கின்றனர். விவரங்களுக்கு கண்காணிப்பாளரை 90251 52075, மேற்பார்வையாளரை 96008 02823, சந்தை பகுப்பாய்வாளரை 87543 79755ல் தொடர்பு கொள்ளலாம்.