மேலும் செய்திகள்
பல்கலை பூப்பந்து போட்டி
03-Apr-2025
மதுரை : மதுரை காந்தி மியூசிய வளாகம் அரசு மியூசியத்தில் கிராமிய ஒலிம்பிக் எனும் தலைப்பில் மரபு விளையாட்டுப் போட்டிகள் துவங்கின.காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஏற்பாடுகளை செய்தார். மாநகராட்சி தணிக்கை அலுவலர் ஜோதி ராமலிங்கம் துவக்கி வைத்தார்.சிறுவர், சிறுமிகள் முதல் 90 வயது பாட்டி (ஆண்டாள்புரம் முத்துலட்சுமி) வரை 50 பேர் பங்கேற்றனர். நரிமேடு செல்லம்மாள் முதலிடம், லேடிடோக் கல்லுாரி மாணவி முஸ்தசிரா 2ம் இடம், செல்லுார் மரியா அனுசியா 3ம் இடம், பீ.பி.குளம் ராஜரத்தினம் ஆறுதல் பரிசு பெற்றனர். மே 3 வரை தாயம், தட்டாங்கல், கிட்டிப்புல், கோலிக்குண்டு, நொண்டி, பம்பரம் போட்டிகள் நடைபெறும்.
03-Apr-2025