உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருநகர் - வேடர்புளியங்குளம் ரோட்டில் ரவுண்டானா அவசியம்

திருநகர் - வேடர்புளியங்குளம் ரோட்டில் ரவுண்டானா அவசியம்

திருநகர்: திருநகர் 3வது பஸ் நிறுத்தம் அருகே சந்திப்பு ரோடு பகுதியில் ரவுண்டானா இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இந்த ஸ்டாப் அருகே தனக்கன்குளம் பிரிவு ரோட்டில் போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. இங்கு திருமங்கலம் செல்லும் இருவழிச்சாலையில், வேடர் புளியங்குளம், தென்பழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை உள்பட பல்வேறு கிராமங்கள், மற்றும் நான்கு வழிச்சாலைக்கு செல்லும் ரோடு பிரிகிறது.திருநகரில் இருந்து வேடர் புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி செல்கின்றன. அதேபோன்று நான்கு வழிச்சாலை, சாக்கிலிபட்டி தென்பழஞ்சியில் இருந்து திருமங்கலம் செல்லும் வாகனங்கள் செக்போஸ்ட் எதிரேயுள்ள மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.இதனால் அப்பகுதியில் ரோட்டை கடக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மெயின் ரோட்டில் இருபுறமும் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர். அப்படி இருந்தும் அப் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தவிர்க்க இங்கு ரவுண்டானா அமைப்பது அவசியமாகிறது. வாகனங்கள் இதில் வேகத்தை குறைத்து சுற்றிச் செல்லும் என்பதால் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கலாம். எனவே தாமதமின்றி ரவுண்டானா அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை