உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் கண்காட்சி

வேளாண் கண்காட்சி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் தேனி குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லுாரியின் 4ம் ஆண்டு மாணவர்கள் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி அமைத்திருந்தனர். உயிரி பூச்சிக்கொல்லிகள், இயற்கை விவசாயம், பட்டுப்புழு, காளான், தேனீ வளர்ப்பு, வேளாண் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் உள்ளிட்டவற்றை விளக்கினர்.வேளாண் துணை இயக்குநர் மேரிஐரின்அக்னிட்டா, தோட்டக்கலை உதவி இயக்குநர் சரவணப்பிரியா துவக்கி வைத்தனர். மாணவர்கள் அஜய், ஆதிஷ், பாலாஜி, தேவ்நாத், தனுஷ், ஹரிபாலாஜி, முகம்மது லியாஷ், மதுகரோன், சிவபிரகாஷ், ரூபன்டெனி ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !