மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
27-Mar-2025
வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் அலங்காநல்லுாரில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.பாலமேட்டில் மாணவி தேவிஸ்ரீ வாழை மரத்தில் நுாற்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விளக்கினார். வாழைத்தண்டுகள் அல்லது உறிஞ்சும் தண்டுகள் அருகே 50 டிகிரி வெப்ப நிலையில் சுடுதண்ணீர் வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் நீடிக்கும் நடவு பொருளை நடவு செய்யும்முன் அரை வெப்ப நிலையில் குளிர்விக்க வேண்டும் என்றார்.நுாற் புழுக்களின் தாக்குதலை திறம்பட குறைத்து, ஆரோக்கியமான செடிகளுக்கும், அவை விளைச்சலை அதிகரிப்பதற்கும், வாழை பயிர்களில் மற்றொரு பூச்சியான அந்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுவது குறித்தும் செயல்முறையில் விளக்கினார்.
27-Mar-2025