உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க அழகிரி மகன் மனு

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க அழகிரி மகன் மனு

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம் ஒத்திவைத்தது.சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனம், அதன் இயக்குனர்களாக இருந்த நாகராஜன், தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன்) மீது கீழவளவு போலீசார் 2012ல் வழக்கு பதிந்தனர். அரசுக்கு ரூ.256.44 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தி ஆதாயமடைந்ததாக கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிந்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி தயாநிதி மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி சண்முகவேல் விசாரித்தார்.தயாநிதி தரப்பு வழக்கறிஞர்: மனுதாரருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனரீதியான பிரச்னைகள் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்: மனுதாரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. தயாநிதியின் சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை ஜூன் 16ல் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை