உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அண்ணா பல்கலை தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலை தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அண்ணா பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் நிறுத்திவைக்கப்படும். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு மட்டும் அல்லாமல் அடுத்த ஆண்டும் நிறுத்திவைக்கப்படும். இந்த விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அடுத்த சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை தேர்வு கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு பொன்முடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஆக 26, 2024 04:11

தமிழர்களைப் படித்து முன்னேற விட்டுவிடுவோம் என்று மட்டும் கனவு காணாதீர்கள். எங்களுக்கு கோபாலபுர குடும்பத்துக்கு வாழ்க கோஷம் போட வாழ்நாள் கொத்தடிமைகள்தான் தேவை.


Sivakumar Murugesan
ஆக 25, 2024 20:07

please do not increase


புதிய வீடியோ