போதைப்பொருள் ஒழிப்பு பேரணி
மதுரை: அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடந்தது. மையத்தின் மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்தழகு வரவேற்றார். பள்ளித் தலைவர் அசோகன், மைய மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தனர். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா, சேடப்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன், ஏட்டு பாலகிருஷ்ணன் குற்றத்தடுப்பு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். போதைப் பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மை விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி., பாஸ்கரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பொன்மேகலா தொகுத்து வழங்கினார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் இருளப்பன் நன்றி கூறினார்.