உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சைபர் குற்றங்களுக்கு பேராசையே காரணம்; ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேச்சு

சைபர் குற்றங்களுக்கு பேராசையே காரணம்; ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேச்சு

மதுரை : ''சைபர் குற்றங்களுக்கு பேராசையே காரணம். சுய ஒழுக்கம் மட்டுமே சரியான தீர்வு'' என சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேசினார்.மதுரை மகபூப்பாளையம் எம்.பி.சி., அரங்கில் உற்பத்தி வார விழாவை முன்னிட்டு மதுரை உற்பத்தி கவுன்சில் சார்பில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏ.டி.எஸ்.பி., கருப்பையா பேசியதாவது:2021ல் 500க்கும் மேற்பட்ட சைபர் புகார்கள் வந்த நிலையில் 2024ல் ஆயிரத்து 500 ஆக அதிகரித்தன. இந்தாண்டு ஜனவரி வரை 200க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. கொரோனா காலத்தில் ஒரு சதவீதமாக இருந்த புகாரின் அளவு தற்போது 400 சதவீதமாக அதிகரித்துள்ளது. 40 சதவீதத்திற்கும் அதிகமான குற்றங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஓ.டி.பி., பாஸ்வேர்டுகளை அலைபேசியில் யாரிடமும் வழங்க கூடாது. சமூக வலைதளங்களில் போட்டோக்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.சைபர் குற்றங்களுக்கு காரணம் பேராசை. குற்றங்களை தடுக்க வீட்டில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் அழுவதை நிறுத்த அலைபேசிகளை கொடுப்பது தவறு. மாத சம்பளம் தவிர தவறான முறையில் பணவரவு கிடைப்பதை வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நேர்மையான வாழ்வு கஷ்டமாகத்தான் இருக்கும். வீட்டில் கண்காணிக்க தவறும் பட்சத்தில் போலீசார் தண்டிக்க நேரிடுகிறது.வட மாநிலங்களில் டிஜிட்டல் முறையில் மக்களை ஏமாற்ற 'கோச்சிங்' கொடுக்கின்றனர். சைபர் குற்றங்களால் பணம் மட்டுமின்றி பெண்களின் கற்பு, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு பறிபோகின்றன. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் தீயவைகளை தடுக்க முடியாது. அவரவர் சுய ஒழுக்கமே சரியான தீர்வு. சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோர் 2 மணி நேரத்திற்குள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணிலோ www.cybercrime.gov.inதளத்திலோ புகார் அளித்தால் பாதிப்பில் இருந்து மீளமுடியும்.இவ்வாறு பேசினார்.சைபர் குற்றப் பிரிவு எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், சுதர்ஷனா சைபர் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள், தீர்வுகள் குறித்து விளக்கினர். கவுன்சில் தலைவர் ராஜேந்திர பாபு, விழா சேர்மன் பிரதாப் சேது, துணை சேர்மன் சுப்புராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை