மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி மாணவர்களுக்கு கல்வித் துறையில் நடைமுறையில் உள்ள 'மணற்கேணி செயலி'யை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் முதல்வர் ஜார்ஜ் தலைமையில் நடந்தது. பேராசிரியர் அகமது, 'செயலி' மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இச்செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை குறித்தும், டி.என்.பி.எஸ்.சி., நீட், ஜெ.இ.இ., கிளாட், கியூட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு உள்ள பாடத்திட்டங்கள் குறித்தும், உயர்கல்வி வழிகாட்டி தொடர்பான வீடியோக்கள் குறித்தும் மாணவர்களிடையே கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மதன், கார்த்திகாதேவி, துாதுவர்கள் ராதிகா, அழகுபாண்டி, ரம்யா, கலைச்செல்வி செய்தனர்.