உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு மாரத்தான்

 விழிப்புணர்வு மாரத்தான்

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ரத்ததான கழகம் சார்பில் விழிப்புணர்வு 'மாரத்தான்' போட்டி நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் துவக்கி வைத்தார். டீன் அருள் சுந்தரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.கல்லுாரி வளாகத்தில் தொடங்கி அண்ணா பஸ் ஸ்டாண்ட், வேலு நாச்சியார் மேம்பாலம், கே.கே நகர் ஆர்ச், வழியாக மீண்டும் மருத்துவக் கல்லுாரியில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில், துணை முதல்வர் டாக்டர் மல்லிகா, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குமரவேல், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் பங்கேற்றனர். போலீசார் தலசீமியா நோயாளிகளுக்கு உதவும் வகையில், தன்னார்வ ரத்த தானதாரர்களை ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி