விழிப்புணர்வு ஊர்வலம்
வாடிப்பட்டி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி பரவை மங்கையர்கரசி மகளிர் கல்லுாரி சார்பில் சமயநல்லுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., ஆனந்தராஜ், கல்லுாரி இயக்குனர் சக்தி பிரணேஷ் துவக்கி வைத்தனர். சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி 50 மாணவிகள் டூவீலரில் ஊர்வலமாக சென்றனர். நிர்வாகி செந்துார் பிரியதர்ஷினி, சாலை பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா, உடற்கல்வி ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.