உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மார்க்சிஸ்ட் மாநாடு நடப்பதால்...

மார்க்சிஸ்ட் மாநாடு நடப்பதால்...

மதுரையில் மார்க்சிஸ்ட் அ.இ.மாநாட்டையொட்டி இன்று (ஏப்.,6) ரிங்ரோடு வண்டியூர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இடையூறின்றி வாகனங்கள் சென்றுவர கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் காவல்துறை மாற்றம் செய்துள்ளது.அனைத்து வகை வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்கள்:n பி.சி.பெருங்காயம் சந்திப்பிலிருந்து விழா நடைபெறும் மைதானம் வழியாக விரகனுார் ரவுண்டானா செல்லும் வாகனங்களின் போக்குவரத்து தேவையானபோது மாற்றியமைக்கப்படும். பி.சி.பெருங்காயம் சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி, ஒத்தவீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனுார் ரவுண்டானா செல்ல வேண்டும்.n விரகனுார் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பி.சி.பெருங்காயம் சந்திப்பு, மேலுார் ரோடு செல்லும் வாகனங்கள் விரகனுார் ரவுண்டானா, தென்கரை ரோடு, அண்ணாநகர், மேலமடை சந்திப்பு, லேக்வியூ ரோடு, பழமார்க்கெட் ரோடு சந்திப்பு, மாட்டுத் தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, ஒத்தக்கடை வழியாக மேலுார் ரோடு, நான்கு வழிச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள்:n திண்டுக்கல், வாடிப்பட்டி வழியாக வரும் வாகனங்கள் மதுரைக்குள் நுழையக்கூடாது. துவரிமான் பைபாஸ் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் வழியாக திருமங்கலம் - கப்பலுார் பாலம் சென்று இடதுபுறம் திரும்பி அருப்புக்கோட்டை ரிங்ரோடு சந்திப்பு, மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வழியாக மாநாட்டு மைதானம் செல்ல வேண்டும்.n சோழவந்தான் துவரிமான் வழியாக வரும் வாகனங்கள் மதுரைக்குள் செல்லக்கூடாது.துவரிமான் பைபாஸ் சந்திப்பு வலதுபுறம் திரும்பி நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் வழியாக திருமங்கலம் - கப்பலுார் பாலம் சென்று இடதுபுறம் திரும்பி மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் சந்திப்பு வழியாக மைதானம் செல்ல வேண்டும்.n உசிலம்பட்டி, நாகமலை புதுக்கோட்டை வழியாக வரும் வாகனங்கள் மதுரைக்குள் செல்லக்கூடாது. நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் வலதுபுறம் திரும்பி திருமங்கலம் - கப்பலுார் பாலம் சென்று இடதுபுறம் திரும்பி மண்டேலா நகர் ரிங்ரோடு, விரகனுார் சந்திப்பு வழியாக மைதானம் செல்ல வேண்டும்.n திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம் வழியாக வரும் வாகனங்கள் மதுரைக்குள் நுழையக்கூடாது.கப்பலுார் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகர், விரகனுார் சந்திப்பு வழியாக மைதானம் செல்ல வேண்டும்.n கொட்டாம்பட்டி, மேலுார் வழியாக வரும் வாகனங்கள் மதுரைக்குள் நுழையக்கூடாது. ஒத்தக்கடை, ரிங்ரோடு, பி.சி.பெருங்காயம் சந்திப்பு வழியாக மைதானம் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ