பா.ஜ., சிறப்பு ஆய்வுக் கூட்டம்
திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்டத்தில் நடந்த பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமையில் திருமங்கலத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரின் சுற்றுப்பயண பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி முன்னிலை வகித்தார். உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட பொறுப்பாளர் சரவணகுமார், பொறுப்பாளர்கள் சோலை மணிகண்டன், உதயச்சந்திரன், சோமசுந்தரம், நவீன் குமார், பார்வையாளர் கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.