உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமத்தினருடன் பா.ஜ., கலந்துரையாடல் பெண்களிடம் குறைகேட்ட நயினார் நாகேந்திரன்

கிராமத்தினருடன் பா.ஜ., கலந்துரையாடல் பெண்களிடம் குறைகேட்ட நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் : 'திருப்பரங்குன்றம் கைத்தறி நகரில் பா.ஜ.,வினர் நடத்திய கலந்துரையாடலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பெண்கள் குறைகளை அடுக்கினர். திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகரில் பா.ஜ., மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் கிராம பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் ராக்கப்பன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், மேலிட பார்வையாளர் அரவிந்தன் மேனன், மாவட்ட பொறுப்பாளர் ராஜரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன், ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி, கோபாலாச்சாரி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர் கிரம மக்களுடன் கலந்துரையாடினார். குமுறிய பெண்கள் பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் மத்திய அரசின் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குடிநீர் வினியோகிக்கவில்லை. குடிநீர் வரியாக ரூ. 720 கட்டினால்தான் வீட்டு வரி செலுத்த முடியும் என்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் பலர் நன்மை அடைந்ததாகவும், இலவச காஸ் பெற்றுள்ளதாகவும் பெண்கள் தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்ட நயினார் நாகேந்திரன், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததைப் போல் தி.மு.க.,வினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர். தமிழகத்தில் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்ந்து விட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளது. இவற்றை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. ரேஷன் பொருட்கள் அனைத்தையும் மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் தி.மு.க., அரசு வழங்குவது போல் செயல்படுகின்றனர். தி.மு.க., ஆட்சி அவலங்களை போக்க தே.ஜ., கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை