உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நுால் வெளியீடு

 நுால் வெளியீடு

மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரி கணிதத் துறை சார்பில் 'எசன்ஷியல் கிராப் தியரி - கான்செப்ட்ஸ் அண்ட் ஆல்கரிதம்ஸ்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலை பதிப்பு மூலம் வெளியான இந்நுாலை லேடிடோக் கல்லுாரி உதவி பேராசிரியை இவாஞ்சலின் பிரதீபா, புதுச்சேரி பல்கலை ராமானுஜன் கணித அறிவியல் பள்ளி இணை பேராசிரியர் ஆசீர், மகாராஷ்டிர எஸ்.ஆர்.டி.எம்., பல்கலை இணை பேராசிரியர் சுரேந்திரநாத் ரெட்டி இணைந்து எழுதியுள்ளனர். மனோன்மணி சுந்தரனார் பல்கலை பேராசிரியர் கலா முதல் பிரதியை வெளியிட, கல்லுாரி துணை முதல்வர் நிம்மா எலிசபெத், பொருளாளர் வனிதா மலர்விழி, பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர். நுாலாசிரியர்கள் நுாலின் கருவை விளக்கி ஏற்புரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !