உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிராமணர் சங்க தலைவர் தேர்வு

பிராமணர் சங்க தலைவர் தேர்வு

மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரி குருராஜன் நிர்வாகிகளை அறிவித்தார். தலைவராக ஆர்.ஜெயஸ்ரீ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ். எஸ். காலனி கிளை மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீதாராமன், சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி நடேஷ்ராஜா, பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் தலைவர் சங்கரநாராயணன், சன்மேக் சங்கரநாராயணன், அம்மா கேட்டரிங் கிருஷ்ண ஐயர், சட்ட ஆலோசகர் என்.சுந்தரேசன், சமூக ஆர்வலர் இல.அமுதன் வாழ்த்திப்பேசினர். மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகுமார் நன்றி கூறினார். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் மண்டபத்தில் நீர்மோர் பந்தல் துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ