மாட்டு வண்டி பந்தயம்
மேலுார்: கிடாரிபட்டியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.பெரியமாடு பந்தயத்தில் 18 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் கோவை பாப்பு நாயக்கர், டி.புதுப்பட்டி சிவபாலன், பரளி சித்தார்த், மேலமடை சீமான் மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன. சிறிய மாட்டில் 32 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.மேலுார் சிக்கிபாய், காரமடை சஞ்சய் முதல் பரிசு, கூடலுார் காசி, அவனியாபுரம் மோகன்சாமி குமார் 2ம் பரிசு, அ.வல்லாளபட்டி அருண், செட்டிகுளம் முனியாண்டி சாமி 3ம் பரிசு, அவனியாபுரம் மோகன்சாமிகுமார். நரசிங்கம்பட்டி ராக்காயி மாடுகள் 4ம் பரிசை வென்றன.