வயலுக்குள் பாய்ந்த பஸ்
சோழவந்தான்: சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் பஸ் டெப்போ அருகே அரசு பஸ் வயலுக்குள் கவிழ்ந்தது. இந்த பஸ்சை டிரைவர் மகாலிங்கம் 45, பணிக்கு செல்வதற்காக பஸ்சை டெப்போவில் இருந்து வெளியே எடுத்து வந்துள்ளார். ரோட்டில்நிறுத்திவிட்டு அருகே கோயிலில் சுவாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் தானாக நகர்ந்து சென்று வயலுக்குள் கவிழ்ந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.