உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்காசி கோயில் கும்பாபிேஷகம்     தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு 

தென்காசி கோயில் கும்பாபிேஷகம்     தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு 

மதுரை : தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபி ேஷகத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.தென்காசி நம்பிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடைபெறவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார். கோயில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானத்தை கோயில் கணக்கில் வரவு வைக்கவில்லை. மணல் அள்ளியதால் கோயில் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரி செய்யவில்லை. வண்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை. சுவாமிகள் புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. அன்னதானக்கூடம் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. புனரமைப்பு பணி முழுமையடையும்வரை கும்பாபி ேஷகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணியை ஆய்வு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு,'புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்து விட்டது,' என தெரிவித்தது. நீதிபதிகள் நாளை (ஏப்.3) ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை