உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு சி.பி.எஸ்., இறுதித்தொகை அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு சி.பி.எஸ்., இறுதித்தொகை அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மதுரை : 'ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ( சி.பி.எஸ்.,) இறுதித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்' என அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் வலியுறுத்தினர்.வருவாய்த் துறையில் கிராம உதவியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 1994ல் தமிழக அரசு சலுகைகள் வழங்கியது.அவர்கள் இறுதியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதனால் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு 10 சதவீதம் பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.இந்நிலையில் நிதித்துறை கடிதத்தை காரணம் காட்டி 2021 அக்., முதல் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு சந்தா தொகை பிடித்தம் நிறுத்தப்பட்டது.நடைமுறையிலுள்ள அரசாணைகளை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் வருவாய் கமிஷனரிடம் முறையிட்டதன் பேரில் மீண்டும் சந்தா பிடித்தம் செய்யப்பட்டது.2003 முதல் 2021 வரையான காலத்தில் கிராம உதவியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகை அவர்கள் ஓய்வுக்கு பின் இறுதித் தொகையாக வழங்கப்படவில்லை. 2022 மார்ச் 10ல் வருவாய்த் துறை கமிஷனர், கருவூலத் துறை கமிஷனருக்கு இதுகுறித்து தெளிவுரை வழங்குமாறு அரசின் நிதித்துறைக்கு கடிதம் அனுப்பினார். 2 ஆண்டுகளாகியும் தெளிவுரை வழங்காமல் நிதித்துறை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ்ச்செல்வி, ஜெயராஜராஜேஸ்வரன் கூறியதாவது: தனியார் நிறுவனம் இவ்வாறு செய்திருந்தால் பொருளாதார குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசே தன் ஊழியர்களுக்கு இவ்வாறு செய்வது சரியல்ல. 2021 முதல் 2024 வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓய்வு பெற்றும் பங்களிப்பு இறுதித் தொகை 2 ஆண்டுகளாக தரப்படாததால் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். அவர்களுக்கு சி.பி.எஸ்., திட்டத்தில் செலுத்திய தொகை, அரசின் பங்குத் தொகை, வட்டியுடன் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை