உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா

முதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா

மதுரை: மதுரை யாதவர் மகளிர் கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி பரிசுவழங்கி பேசியதாவது: முதல்வர் விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு மாநில அளவில் ரூ.25 கோடி பரிசு வழங்கப்பட்டது. இந்தாண்டு ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டு கூடுதலாக கேரம், கைப்பந்து, செஸ், கோகோ ஆகிய 4 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.மாவட்ட அளவில் கடந்தாண்டு 10 ஆயிரத்து 403 பேர் பங்கேற்றனர். இந்தாண்டு 13 ஆயிரத்து 915 பேர் பங்கேற்றுள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஒவ்வொரு வீரருக்கும் தனிநபர் போட்டிகளில் முதல்பரிசு ரூ.ஒரு லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணைமேயர் நாகராஜன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் சோலைராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, துணை கலெக்டர் அனிதா, தாளாளர் போத்திராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி