உள்ளூர் செய்திகள்

 சினிமா

4 நாட்களில் 761 கோடி வசூலித்த 'துரந்தர் 2' ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த வாரம் மார்ச் 19ல் வெளியான படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் முதல் வார இறுதியில் 761 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் 550 கோடியும், வெளிநாடுகளில் 211 கோடியும் வசூலித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். விரைவில் இந்தப் படம் 1000 கோடி வசூலைக் கடக்க உள்ளபேண்டஸி, திரில்லர் படத்தில் சந்தீப் கிஷன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' படத்தில் நடித்துள்ளார் சந்தீப் கிஷன். அடுத்து இவரின் 33வது படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. உகந்தர் முனி இயக்குகிறார். படக்குழு வெளியிட்ட செய்தியில், ''சந்தீப் கிஷனின் திரை வாழ்வில் அதிக செலவில் உருவாகும் படம் இது. பேண்டஸி, திரில்லர் கதையில் உருவாகிறது. கதை சொல்லல், விஷூவல் எபெக்ட்ஸ் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை தரும். ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு துவங்குகிறது'' என குறிப்பிட்டுள்ளனர். சினிமாவில் 49 : ராதிகாவை வாழ்த்திய 'ஹாய்' படக்குழு 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா. சினிமாவில் 49வது ஆண்டை கொண்டாடி வருகிறார். அவர் நடிக்கும் 'ஹாய்' படக்குழுவினர் இதை கேக் வெட்டி கொண்டாடினர். அதில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா, நாயகன் கவின், பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ராதிகாவுக்கு வாழ்த்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை