உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்லுாரி மாணவர் பலி

 கல்லுாரி மாணவர் பலி

திருமங்கலம்: தேனி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் 19. இவர் திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் சமையல் கலை 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் திருமங்கலம் ஷியாம் ஸ்டீபன் 19. நேற்று கல்லுாரியில் தேர்வுகள் நடந்த நிலையில் இருவரும் தேர்வு எழுதியுள்ளனர். பின்னர் ஷியாம் ஸ்டீபனை திருமங்கலத்தில் இறக்கி விடுவதற்காக பிரேம்குமார் தனது டூவீலரில் அவரை அழைத்து வந்துள்ளார். ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி தனியார் பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், ரோட்டோர தடுப்பில் மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். காலில் காயம் அடைந்த ஷியாம் ஸ்டீபன் சிகிச்சை பெற்று வருகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ