பயிர் காப்பீடு நவ.15 கடைசி
பேரையூர்: விவசாயிகள், மக்காச்சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவ.15ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளனர்.வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறுகையில், ''இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு. நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம். நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் நகலுடன் அருகேயுள்ள பொதுச் சேவை மையங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்யலாம். இதற்கு நவ.15 கடைசி என்றார்.