தீக்குளித்த தலையாரி இறப்பு
பேரையூர் : டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சங்கிலிமுருகன் பேரையூர் தாலுகா டி.குன்னத்தூர் கிராம தலையாரி ஆக உள்ளார். அவரது மனைவி சோனியா 34. செங்குளம் கிராம தலையாரியாக வேலை செய்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த வாரம் குன்னத்தூர் சென்ற சோனியாவுக்கும் சங்கிலிமுருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பெட்ரோல் ஊற்றி சோனியா தீக்குளித்தார். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.